2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 15 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்திர விராஜ் அபயசிறி

அரசியல் கைதிகளை நிபந்தனைகள் இன்றி உடனடியாக விடுதலைசெய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, மாத்தளை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் நீதிக்கான மலையக சமூக இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கொட்டும் மழையிலும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி.யை, அரசியல் கைகூலியாக வைத்துக்கொண்டு சந்தேகநபர்களை துன்புறுத்தாதே, அப்பாவிகளை விடுதலைச்செய் போன்ற வாசகங்கள் எழுதிய பாதாகைகளை ஏந்தி நின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .