Janu / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு சமையல் எரிவாயு விலையதிகரிப்பை தொடர்ந்து, சோறு மற்றும் கறி பொதிகள் பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும் கொத்து (Kottu) உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலைகளை 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தேங்காய் எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதால், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (06) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பானது உணவகங்களின் இயங்குசெலவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த விலைத் திருத்தம் தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago