Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.தி.பெருமாள், ரஞ்சித் ராஜபக்ஷ
மஸ்கெலியா, சாமிமலை மற்றும் கவரவிலவில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 35 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இவர்கள், தோட்டத்திலுள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் ஆலயங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சாமிமலை, கவரவில தோட்டம் 200 ஏக்கர் பிரிவில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது மண்திட்டு சரிந்து விழுந்ததில் அக்குடியிருப்பு முற்றமுழுதாக மண்ணில் புதையுண்டுள்ளதுடன் இக்குடியிருப்பில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சாமிமலை டீசைட் தோட்டத்தின் மல்லியப்பு பிரிவில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் ஒரு லைன் குடியிருப்பு நீரில் மூழ்கியுள்ளதுடன் இக்குடியிருப்பில் வசித்து வந்த 20 பேர் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க பிரதேச செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷணன் சென்று பார்வையிட்டார்.
கடந்த சில தினங்களாக கடும்மழை பெய்துவருவதால் மவுசாகலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 125 அடியாக உயர்ந்துள்ளது எனவும் இம்மழை தொடருமாயின் ஓரிரு தினங்களில் நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படலாம் எனவும் லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago