2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ரயில் தடம்புரண்டது...

Kogilavani   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலைக்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயில், வட்டவளை புகையிரத நிலையத்துக்கு அருகில், இன்று அதிகாலை 4 மணியளவில் தடம்புரண்டுள்ளதாகவும் இதனால், மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும்(5)  இவ்வாறு, நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலைக்கு எண்ணெய் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற ரயில், வட்டவளை ரயில் நிலையத்துக்கருகில் தடம்புரண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X