2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்...

Sudharshini   / 2015 ஜூன் 07 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி பெருந்தோட்ட நிறுவனங்களுக்கெதிரான கவனயீர்ப்புப் போராட்டம் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று (07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள  இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில், பெருமளவிலான தோட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு  தமக்கான அடிப்படைச் சம்பளமான 450 ரூபாவை 800 ரூபாவாக அதிகரித்து ஏனைய கொடுப்பனவுகள் அடங்கலாக 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கொட்டகலை நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீPதரன் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .