2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கையெழுத்து வேட்டை...

Princiya Dixci   / 2015 ஜூன் 07 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையொழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கை, முசலி பிரதேச சபைக்குட்பட்ட மறிச்சுக்கட்டி கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வட மாகாணசபை உறுப்பினர் ரிபாகான் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சேகரிக்கப்படும் கையெழுத்துக் கோரிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதன்போது தெரிவித்தார். 

இடம்பெயர்ந்துள்ள வடபகுதி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) ஜும்-ஆ தொழுகையினைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாசல்களில் கையெழுத்து வேட்டை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: எஸ்.றொசேரியன் லெம்பேட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .