2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பிரியாவிடை...

Thipaan   / 2015 ஜூன் 13 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சி.என்.வாகிஸ்ட்ட ஓய்வு பெற்றுச் செல்வதையொட்டி, அவருக்கு  பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடனான பிரியாவிடை வைபவம் இன்று சனிக்கிழமை (13) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்க மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான அநுரத் ஹக்மன பண்டார மற்றும் பி.எம்.தஸாநாயக்கா உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதரிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது அணி வகுப்பு மரியாதை இடம் பெற்று அவருக்கான நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

இதன் போது சென்.ஜோன்ஸ அம்புலன்ஸ் சேவையின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ஏ.எல்.மீராசாகிப் மாலை அணிவித்து கௌரவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .