2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சூடு பிடிப்பு...

Princiya Dixci   / 2015 ஜூலை 10 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சூடுபிடித்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வேட்பு மனுத்தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை (10) செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம் : த.தே.கூ.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் யாழ்.மாவட்டச் செயலக உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மாவை சேனாதிராசா, ஆறுமுகம் கந்தை பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆபிராம் மரியாபரணம் சுமந்திரன், கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, சிவஞானம் சிறிதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், அருந்தவபாலன் கந்தையா, திருமதி மதினி நெல்சன், ஆனந்தராஜ் நடராஜா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். 

யாழ்ப்பாணம் : ஈ.பி.டி.பி.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்டச் செயலக உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

கடந்த தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இம்முறை தமது கட்சியின் சின்னமாக வீணையில் தனித்து நின்று போட்டியிடுகின்றது.

கே.என்.டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார், சில்வஸ்ரின் அலன்ரீன், ப.சீவரத்தினம், சிவகுரு பாலகிருஷ்ணன், ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், துரைமுத்து அலெக்ஸாண்டர், இராமநாதன் ஐங்கரன், யோகேஸ்வரி பற்குணராசா, இராசாமிசெட்டியார் செல்வவடிவேல் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். (படங்கள்: சொர்ணகுமார் சொரூபன்) 

மட்டக்களப்பு : த.தே.கூ.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான பொன். செல்வராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், கு.சௌந்தரராஜன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெத்தினம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன் மற்றும் சதாசிவம் வியாளேந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்)

வன்னி : த.தே.கூ. 

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் சமூக சேவகர் சார்ள்ஸ் நிமலநாதன் (மன்னார் மாவட்டம்), றோய் ஜெயகுமார் (வவுனியா மாவட்டம்), திருமதி சாந்தி கிருஸ்கந்தராஜா (முல்லைத்தீவு மாவட்டம்) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

புளோட் சார்பில் வட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசனும் ரெலோ சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகரலிங்கம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். (படங்கள்: ரெமேஸ் மதுசங்க, மார்க் ஆனந்த், நவரத்தினம் கபில்நாத்)

வன்னி : ஜே.வி.பி.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சார்பில் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியினர் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல கரிச்சந்திரவிடம் தமது வேட்பு மனுவை கையளித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ரட்ணாயக உபால் கெட்டிகே சமரசிங்க, ஜோசப் ஜோர்ஜ் அலோசியஸ், எ. வி. கருணாதிலக, எம்.ஏ. சமரசிங்க பண்டார, ஆசிர்நுவன் பிரியதர்சன சோமரட்ன,அஜித் இந்திக நிரியல்ல, செபஸ்டியன் லாசரஸ், அப்புகாமிகே அனுரசந்திரசேகர, சிகாமணி ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். (படங்கள்: ரெமேஸ் மதுசங்க, நவரத்தினம் கபில்நாத்)

திருகோணமலை : த.தே.கூ.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்கள். 

இரா.சம்பந்தன் (முதன்மை வேட்பாளர்), க.துரைரெட்ணசிங்கம், க. ஜிவரூபன், திருமதி இந்திரா தர்மராசா, ச.புவனேந்திரன், ஆ.ஜசிந்திரா மற்றும் த. கனகசிங்கம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். (வடமலை ராஜ்குமார், எப்.முபாரக், ​ஏ.எம்.ஏ.பரீத், ​ஏ.எஸ்.எம் .யாசீம்

அம்பாறை: த.தே.கூ.

கேகாலை: இ.தொ.கா.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அண்ணாமலை பாஸ்கரன், கேகாலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தனது வேட்புமனுவை திங்கட்கிழமை (13) தாக்கல் செய்தார். 

சப்ரகமுவ மாகாண சபைக்கு கேகாலை மாவட்டத்திலிருந்து தெரிவாகிய ஒரேயொரு தமிழ் உறுப்பினரான இவர், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

திருகோணமலை : ஜனசெத பெரமுண

திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனசதபெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் வண. பத்தரமுல்லே சீலரதன தேரரால் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

கே.எம்.பிசிர சேனாரட்ன, சேருவில தம்மவிலான தேரர், வீ.ஏ.ரங்கவெடக்கொட, எம்.ஆராயச்சிகே அஜித், எம்.கேமசந்திர, யு.ஜி,கருணாவதி மற்றும் யு.எம். பொடி மகத்தையா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். (ஒலுமுதீன் கியாஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .