2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரதாலையில் விபத்து...

Kogilavani   / 2015 ஜூலை 26 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதீஷ், கு.புஷ்பராஜா

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி, எரிவாயு சிலிண்டர்களை கொண்டுசென்ற லொறி, ரதாலையில் நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் சாரதியும் மற்றுமொருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி லொறியில் வாயுநிரப்பப்படாத சிலிண்டர்களே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .