Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுப்பதற்கா 5 தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (28) ஆரம்பமாகியது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது மற்றும் அவர்களிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளும் பிரதான வேட்பாளர்களினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது என்று ஆராயவே பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இன்று ஒன்றுகூடியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வட மாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் சார்பாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உருப்பினருமான த.சித்தார்தன்,ரெலோ சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.குகதாஸ், மூத்த உறுப்பினர் கென்ரி மகேந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக அதன் ஊடக பேச்சாளர் த.அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago