Janu / 2026 மார்ச் 18 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமகிருஷ்ண மிஷன் துறவி, சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 59வது நினைவு தினம், புதன்கிழமை (18) அன்று காரைதீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. காரைதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள சுவாமிஜியின் திருவுருவ சிலையடியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது கொடியேற்றம் (துறவற கீதம்), பஜனை, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வேதபாராயணம் மற்றும் சுவாமிஜியின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து புஷ்பாஞ்சலி செலுத்துதல் ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து, சுவாமி நடராஜானந்தரின் 64 ஆண்டு கால வாழ்க்கை சரித்திர பதாதை மற்றும் சுவாமிஜியின் திருவுருவ சிலைக்கான குடைப்பதாதி என்பன திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டன. அத்தோடு, ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் நினைவாக பாடல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மங்களாரத்தி, தலைமையுரை, சிறப்புரை மற்றும் மகிழ்வுரை ஆகியவற்றுடன் பிரசாதம் வழங்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன.
வி.ரி. சகாதேவராஜா












42 minute ago
46 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
5 hours ago
9 hours ago