2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உள்ளக விசாரணை வேண்டாம்...

Kogilavani   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை வேண்டாம் எனவும், சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்படவேண்டும் எனக்கோரி வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாண சபை கட்டடத் தொகுதிக்குள் தனித்துப் போராட்டம் நடத்தினார்.

ஏனைய உறுப்பினர்களிடம் ஆதரவு தருமாறு அவர் ஏனைய உறுப்பினர்களிடம் கோரியபோதும், அதற்கு எந்தவொரு உறுப்பினரும் ஆதரவு வழங்காமையால் சிவாஜிலிங்கம் தனித்து நின்று போராட்டம் நடத்தினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பமாக முன்னரே சிவாஜிலிங்கம் இவ்வாறானதொரு போராட்டத்தை முன்னெடுத்தார்.

'சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரேரணையொன்றை நிறைவேற்றவுள்ளார். ஆகையால் சபை அமர்வில் கலந்துகொள்ள வாருங்கள்' என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சிவாஜிலிங்கத்தை கேட்டுக்கொண்டதுக்கிணங்க சிவாஜிலிங்கம் போராட்டத்தைக் கைவிட்டு சபை அமர்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .