2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

எதிர்ப்புப் பேரணியும் ஆர்ப்பாட்டமும்

Janu   / 2024 ஜனவரி 22 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிகழ்நிலை காப்புச் சட்ட வரைபு, பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபு சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் எதிர்ப்புப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் திங்கட்கிழமை நடைபெற்றது. அத்துடன் அடையாள உண்ணாவிரதம் ஒன்றும் நடைபெற்றது.

கிழக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியில் கிழக்கின் பல பகுதிகளையும் செர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடிப் பாலம் அருகில் ஆரம்பமான பேரணி காந்திப்பூங்காவரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்று அதனையடுத்து கிழக்கு சிவில் பிரதிநிதிகளின் பிரகடனம் வாசிக்கப்பட்டது.



இவ் ஆர்ப்பாட்டப் பெரணியில் கலந்து கொண்டவர்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டங்களுக்கெதிரான வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்த அதே நேரம் கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் தொடர்பான பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பு கோசங்களும் எழுப்பியுள்ளன.



முக்கியமாக இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியான உண்ணாவிரதத்துக்கான பந்தலமைப்புகள் பாதுகாப்புத் தரப்பினரால் அகற்றப்பட்டு இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த எதிர்ப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதிரன் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X