Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
டீசலை ஏற்றிச் சென்ற பௌசர் , கினிகத்ஹேன நகரில் வைத்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சபுகஸ்கந்தயிலிருந்து கொட்டகலை உள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய சாலைக்கு டீசலை ஏற்றிச் சென்ற நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, விபத்துக்குள்ளாகியுள்ள பௌசரில் 33,000 லீற்றர் டீசல் காணப்படுவதாகவும், தற்போது பௌசரிலிருந்து டீசல் கசிவு ஏற்பட்டுள்ளதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த பௌசரின் சாரதி, நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளாகியுள்ள பௌசரில் உள்ள டீசல் எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதோடு, பௌசரையும் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago