Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(படங்கள் - வ.சக்தி, கே.எல்.ரி.யுதாஜித்)
மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சொந்தமான திருப்பெருந்துறை திறந்தவெளி பண்ணையின் நெல் அறுவடை விழா, இன்று (15) நடைபெற்றது.
விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில், நெல் அறுவடை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூன்று தசாப்த காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த குறித்த 23 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பண்ணையில், கடந்த இரு வருடங்களாக வேளாண்மையும் ஏனைய பயிர்ச்செய்கைகளையும் மேற்கொண்டுவந்த நிலையில், கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருடமும் பசுமை விவசாயப் புரட்சி திட்டத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சம்பா வகை நெல்லினம் இம்முறை விதைக்கப்பட்டிருந்ததுடன், சிறந்த விளைச்சலும் கிடைத்துள்ளது.
இச் செயற்பாடானது கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் ஒரு செயற்பாடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago