Freelancer / 2023 ஏப்ரல் 17 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்- சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர், நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ், சிங்கள மொழி மூலமான பாடசாலைகள், இன்றைய தினம் (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெய்து வரும் மழை காரணமாக மேல் மாகாண பாடசாலைகளில் இன்று முதல் 19ஆம் திகதி வரை டெங்கொழிப்பு சிரமதான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மேல் மாகாண கல்வித்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கிணங்க நீர்கொழும்பு கல்வி வலய பாடசாலைகளில் இன்று சிரமதானம் ஆரம்பிக்கப்பட்டது.
நீகொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் இன்று டெங்கொழிப்பு சிரமதான பணிகள் அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் இடம் பெற்றன. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பற்றினர்.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. எம்.இஸட். ஷாஜஹான்





4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago