Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜனவரி 12 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சன குமார ஆரியதாஸ
தளபாட வசதிகளின்றி கற்றலில் சிரமத்தை எதிர்கொண்டுள்ள தம்புள்ளை, கலேவெல தலக்கிரியாகமை மகா வித்தியாலத்தில் கல்வி பயின்று வரும் தரம் 6 மாணவர்களுக்கு தளபாட வசதிகளை பெற்றுகொடுக்க உரிய அதிகாரிகள் முன்வர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
இப்பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்று வரும் இரண்டு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் மேசை, கதிரைகள் இன்மையால் பாய் மற்றும் போர்வைகளை நிலத்தில் விரித்து அதில் அமர்ந்தே தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். 1982 ஆம் ஆண்டுக்கு பின்னர், இப்பாடசாலைக்கு எவ்வித தளபாட வசதிகளும் அரசாங்கத்தினால் பெற்றுகொடுக்கப்படவில்லை. உடைந்த நிலையில் காணப்பட்ட தளபாடங்களை தமது சொந்த செலவில் திருத்தம் செய்து தருவதாக கூறி மாணவர்களின் பெற்றோர் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
இத்தளபாடங்கள் திருத்தப்படாத நிலையில் பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் போடப்பட்டுள்ளது. தளபாடங்களை திருத்தித் தராதவரையில், மாணவர்களின் கற்றலை இடைநிறுத்த முடியாது என்பதற்காக போர்வைகள் மற்றும் பாய் போன்றவற்றை நிலத்தில் விரித்து கற்பித்தல் செய்பாடுகளை தொடர்வதாக பாடசாலையின் அதிபர் டீ.ஜீ.விஜேரத்ன கூறியுள்ளார். எனவே, மாணவர்களுக்கு தேவையான தளபாடங்களை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய அதிகாரிகள் கவனம்; செலுத்த வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago