Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2024 பெப்ரவரி 16 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் கல்வி நடவடிக்கைகளை தொடரும் மாணவர்களுக்கு ‘தாயாக கரங்கொடுப்போம்’ செயற்றிட்டத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருமலையிலும் ஆரம்பமானது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணியினால் கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்களுடன் இணைந்து கடந்த 5ம் மற்றும் 6ம் மாதங்களில் முன்னெடுத்த ஒருங்கிணைந்த தீர்மானத்திற்கு அமைவாக,இவை முன்னெடுக்கப்படுகின்றன.
கட்சியின் மகளீர் அணிச்செயலாளர் சுசிகலா அருள்தாஸ் தலைமையில் மூதூர் கல்வி வலையத்துக்குஉ ட்பட்ட மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் வட்டவான் தான்தோன்றீஸ்வரர் வித்தியாலயம், பூமரத்தடிச்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம், ஈச்சிலம்பற்று சிவானந்தா ஆரம்ப பாடசாலை, வட்டவான் தண்ணிப்பூவல் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாழைத்தோட்டம் மீனாட்சி அம்மன் வித்யாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை துறை கனிஷ்ட வித்தியாலயம், உப்பூறல் சிவசக்தி வித்தியாலயம், முத்துச்சேனை வித்தியாலயம், புண்ணையடி நாமகள் வித்தியாலயம், கல்லடி மலை நீலியம்மன் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் மற்றும் அப்பியாச கொப்பிகள் போன்றன வழங்கிவைக்கப்பட்டன.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும்,மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
45 minute ago
2 hours ago