Editorial / 2026 ஜனவரி 01 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு தூய ஆவியானவரின் ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்ட நிலையில் இரவு 11.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்ட பெயர் பலகையை மன்னார் மறைமாவட்ட ஆயர் திரை நீக்கம் செய்து வைத்தார்.
அதனை தொடர்ந்து புதன்கிழமை (31) இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.
இதன்போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.
மேலும் குறித்த புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எஸ். ஆர்.லெம்பேட்





4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago