Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 10 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயா - பதுளை நிலையங்களுக்கு இடையிலான "எல்ல ஒடிசி " என்ற புதிய தொடருந்து சேவை இன்று (10) திங்கட்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நானுஓயா புகையிரத நிலைய வளாகத்தில் இடம்பெற்ற விஷேட சமய வழிபாட்டு நிகழ்வின் பின்னர் தம்மிக ஜயசுந்தர
தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பயணிகளின் சுற்றுலாப் தேவையின் அடிப்படையில் இந்த தொடருந்து சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்த தொடருந்து செவ்வாய்க்கிழமையை தவிர வாரத்தின் ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 8.10 க்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து கண்டிக்கும் இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 7,000 ரூபாவும் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 6,000 ரூபாவும் மூன்றாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 5,000 ரூபாவும் பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ரயில் சேவையினை பாராட்டி நானுஓயா ரயில் நிலையத்தில் ரயில் பெருளமளவான வெளிநாட்டு ,உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் , சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் மற்றும் பொதுமக்கள் நின்று இந்த ரயில் சேவையைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது
செ.திவாகரன் டி.சந்ரு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
35 minute ago
47 minute ago
54 minute ago