Editorial / 2021 நவம்பர் 18 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
யாழ். மாநகர சபையின் உறுதுணையுடன், சைவ மகா சபையால், நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை, இன்று (18) திறந்து வைக்கப்பட்டது.
கார்த்திகை தீபத் திருநாளில் இன்று காலை 10.30 மணியளவில் இறைவணக்கம் செலுத்தப்பட்டு, நந்திக்கொடி ஏற்றப்பட்டதுடன், நாவலர் பெருமானின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மாநகர சபையின் பிரதி மாநகர ஆணையாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ் மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago