2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

படுகொலை நினைவுதினம்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது, இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 21 வைத்தியசாலை பணியாளர்களின் நினைவுதினம், இன்று புதன்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68 பேரைச் சுட்டுக்கொலை செய்தனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களில் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த அனுஷ்டிப்பு நிகழ்வில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .