Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் (அல்-அக்ஸா) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த, மட்டக்களப்பு மாவட்ட புதிய இராணுவ கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஆர்.ஏ.டி.எஸ். ராஜபக்ஷ அவர்களுக்கு வரவேற்பு நிகழ்வும், துஆ பிரார்த்தனையும் புதிய காத்தான்குடி ஆல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பள்ளிவாயலின் தலைவருமான எம்.ஐ.எம். ஜவாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில் கல்லடி இராணுவ முகாமின் கேர்ணல் எச்.பி.ஐ. குமார, குருக்கள் மடம் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி கேர்ணல் பலகல்ல, காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹாரூன் ரஸாதி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம். சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் ஜமாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இராணுவ அதிகாரிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மூவின மக்களுக்கும் சமத்துவமான மற்றும் சிறந்த சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இன ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் மேலும் வலுப்பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், அதற்காக துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.





4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago