2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு...

R.Tharaniya   / 2025 மார்ச் 25 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23)  அன்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்து கொண்டனர். பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல்- அஸீஸ் அவர்கள் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது பாகிஸ்தான் தேசிய கொடியை உயர்த்தி விழாவை ஆரம்பித்தார். இந்நிகழ்வில், பாகிஸ்தான்  ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் விசேட செய்திகளும் வாசிக்கப்பட்டன.

மேலும், கொழும்பிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயம் திங்கட்கிழமை(24 ) அன்று சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இலங்கை அரசியல் தலைமைகள், இராஜதந்திர அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், அரசாங்கப் பிரதிநிதிகள், பிரபல வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் என பெருமளவிலான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது கருத்துதெரிவித்த பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பஹீம் உல் அஸீஸ் அவர்கள், பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நெருங்கிய உறவுகளை தொடர்ந்து பேணி வருகின்றன. வர்த்தகம், பாதுகாப்பு, விஞ்ஞானம், கலாசாரம் மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் பாகிஸ்தான் - இலங்கை உறவு அடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் இலங்கை தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X