2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி...

Freelancer   / 2023 மார்ச் 30 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான மறைந்த ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடலுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று (30) பாரளுமன்றக் கட்டடத் தொகுதியில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோன்று, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்ரிபால சிறிசேன, பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகக் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு மேலதிகமாக, இராஜதந்திர அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட செயலாளர் குழு, பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள், முன்னாள் பணியாளர்கள், பாராளுமன்றத்துடன் இணைந்த ஏனைய பணியாளர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

மறைந்த  ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் தாங்கிய வாகனத் தொடரணி இன்று மு.ப 09.00 மணிக்கு பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்த போது, சபாநாயகர்   மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, பிரதி சபாநாயகர்  அஜித் ராஜபக்ஷ,  கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர ஆகியோரால் பூதவுடல் பொறுப்பேற்கப்பட்டது. பின்னர் படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர், உதவிப் படைக்கலசேவிதர் ஆகியோர் முன்னிலையில் செல்ல பூதவுடல் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற விசேட வைபவ மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .