Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 டிசெம்பர் 20 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்குளப்பகுதியிலே 300 மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.
கமத்தொழில், கால்நடை வளர்ப்பு அமைச்சின் கீழ் சிறிய அளவிலான விவசாய வணிகம் மற்றும் மீண்டெழுதல் கருத்திட்டத்தின் மூலமாக காலநிலைக்கு முகம்கொடுத்தல், அதன் ஊடாக மக்களை எவ்வாறு தயார்ப்படுத்தல், வெப்பத்தினை கட்டுப்படுத்தலும், மழை வீழ்ச்சியை எவ்வாறு பெறுவதும் மற்றும் மண் அரிப்பை தடுப்பதற்காகவும் குறித்த திட்டத்தின் ஊடாக மரம் நடுகை செயற்திட்ட மானது முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் இலுப்பைக்குளப்பகுதியிலே மரநடுகை வெள்ளிக்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது. இதை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர ஆரம்பித்து வைத்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்ரப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர, தலைமைப்பீட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜேந்திரம், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. காஞ்சனா, விவசாயிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
க. அகரன்
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago