2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மரம் விழுந்ததில் ஆசிரியை பலி: ஒருவர் காயம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ், கேதீஸ்

தலவாக்கலை, டெவன் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது மரமொன்று முறிந்து விழுந்ததில், அதில் பயணித்த ஆசிரியையான வெரேனிக்கா (வயது 39) உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில், முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொட்டகலையிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியின் மீதே, இவ்வாறு இன்று (29) பிற்பகல் வேளையில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த ஆசிரியையின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X