Editorial / 2025 மார்ச் 07 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாமனிதர் கிட்டினர் சிவநேசனின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழில் வியாழக்கிழமை (06) அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கட்சியின் யாழ்ப்பாண தலைமைக் காரியத்தில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதர்ஷன் வினோத்









55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago