2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யானையால் சேதமடைந்த ரயில் ...

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

வவுனியா, கனகராஜன்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) மாலை 6.30 மணியளவில் யானையொன்றில் மீது ரயில் மோதியதில் யானை உயிரழந்துள்ளதுடன் ரயிலும் பலத்த சேதமடைந்துள்ளது.  

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலே இவ்வாறு மோதியுள்ளது. ரயில் பாரிய சேதமடைந்தமையால் அதில் பயணித்த பிரயாணிகள், புகையிரதத் திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட பஸ்கள் மூலம் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இதனால், யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவையானது இரவு தடைப்பட்டது.  சேதமடைந்த ரயில் திருத்தப் பணிகளுக்காக கொழும்புக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .