2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரொக்வூட்டில் மண்சரிவு அபாயம்....

Kogilavani   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

காசல்ரீ நீர்தேக்கத்துக்கு அருகிலுள்ள ரொக்வூட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் அப்பகுதியில் வாழும் 20 குடும்பங்கள்  பாதிப்படைந்துள்ளனர்.

இப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட  மண்சரிவு காணமாக இத்தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதை பாதிப்படைந்துள்ளது. பாதையில் மண்மேடு குவிந்துள்ளதால் இத்தோட்ட மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ள இடத்துக்கு கீழ் பகுதியில் வசித்து வரும் குடும்பங்களே நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் வாழும் பகுதிக்கு கீழே நீர்தேக்கமும் அமைந்துள்ளதால் இம்மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

பாரிய மண்சரிவு ஏற்படின் இப்பகுதியில் வாழும் 20 குடும்பங்களும் நீர்தேக்கத்தில் விழும் அப்பாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் இரண்டு முறை மண்சரிவு ஏற்பட்டதாகவும் கற்பாறைகள் காணப்படுகின்றன இடங்களிலே குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .