Freelancer / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபு அலா
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் திங்கட்கிழமை (28) காலை தொடக்கம் மதியம்வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஏ6 பிரதான வீதியை வழிமறித்து கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதியினால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையின் கட்டுமானங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
6 minute ago
17 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
26 minute ago