2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் முறுகல்...

Kogilavani   / 2015 நவம்பர் 04 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன்- டிக்கோயா நகரசபை அதிகாரிகளுக்கும்  நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையில் இன்று(4) ஹட்டனில் முறுகல் நிலை ஏற்பட்டது.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடைபாதை வியாபாரிகள்  நடைபாதை வியாபாரத்தை மேற்கொள்வதற்காக ஹட்டன் பொதுச் சந்தையிலுள்ள இடமொன்று ஒதுக்கி கொடுப்பதற்கு நகரசபை தீர்மானத்திருந்தது.

ஆனால், அவ்விடத்தை ஹட்டனிலுள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்காமல் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த வியாபாரிகளுக்கு வழங்கியதால் இருசாரருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இந்நிலையில் அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நடைபாதை வியாபாரிகள்,

'நாங்கள் பல காலங்களாக இவ்விடத்தில் வியாபரத்தை மேற்கொண்டு வருகின்றோம்;. எனினும் ஹட்டன்-டிக்கோயா நகரசபையானது வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்காக இவ்விடத்தை வழங்குகின்றனர். இது நியாயமற்றது' என்றனர்.

நிலைமையை அறிந்த அவ்விடத்துக்கு சென்ற ஹட்டன்-டிக்கோயா நகரசபை செயலாளர், குறித்த இடத்தில் இடத்தில் வியாபாரம் செய்தவர்களுக்கு வியாபரம் செய்ய இடம் வழங்குவதாகவும் மீதமிருக்கும் இடங்களை வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுப்பட்ட வியாபாரிகள் கலைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .