2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஹோலி பண்டிகை...

Janu   / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் கீழ் சுற்றுலாத்துறை கற்கை பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட H E T Colors 2024 என்ற ஹோலி பண்டிகை, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோலித பண்டார விஜேசேகர தலைமையில் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

மாணவர்களின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை எடுத்துரைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று இதனை ஏற்பாடு செய்த சுற்றுலா, வணிகம் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான முகாமைத்துவ பாடநெறியின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் முகாமைத்துவ பீடாதிபதி தனஞ்சய நவரத்ன மற்றும் சுற்றுலாத்துறை கற்கை பிரிவு தலைவர் சதுரி தந்தநாராயண ஆகியோருடன் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

 பாலித ஆரியவன்ச

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .