2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 20 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் இடம்பெற்று வரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான  கூட்டமைப்பின் உலகத் தொடர் இறுதிகளில், தனது இறுதி குழு நிலைப் போட்டியில் தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருக்கும் செக் குடியரசின் தோமஸ் பேர்டிச்சை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செர்பிய வீரரான நோவாக் ஜோகோவிச் தோற்கடித்து  அரையிறுதிப் போட்டிகளுக்குள் நுழைந்தார்.

இதேவேளை ஏற்கனவே அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்ற, தரவரிசையில் மூன்றாமிடத்திலிருக்கும் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர், தனது இறுதிக் குழு நிலைப் போட்டியில், 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் எட்டாம் இடத்திலுள்ள ஜப்பானின் கெய் நிஷிகோரியை வீழ்த்தினார்.

இதன்படி, நாளை இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் நடாலும் ஜோகோவிச்சும் மோதவுள்ளதோடு, அடுத்த அரையிறுதிப்போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரேயும் உலகின் நான்காம் நிலை வீரரான சுவிட்ஸர்லாந்தின் ஸ்டியான் வொர்விங்காவும் மோதி, வெற்றி பெறுபவர் பெடரருடன் மோதவுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .