Shanmugan Murugavel / 2016 நவம்பர் 08 , பி.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீற்றர் சிடில் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உபாதை காரணமாக நீண்டகாலமாகப் போட்டிகளின் பங்குபற்றாத பின்னர், முதலாவது போட்டியில் பங்குபற்றிய சிடில், இரண்டாவது போட்டியில் பங்குபற்றுவதற்கான உடற்றகுதியை அடையவில்லை என அறிவிக்கப்படுகிறது. சிடிலுக்குப் பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஜக்ஸன் பேர்ட் இணைக்கப்பட்டுள்ளார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் ஜோ மென்னி, 2ஆவது போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான ஷோன் மார்ஷ், உபாதை காரணமாக இப்போட்டியிலிருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுள்ளதோடு, மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரரான அடம் வோஜஸுக்கும் உபாதை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் இன்னமும் குழாமிலிருந்து வெளியேற்றப்படவில்லை.
இதேவேளை, முதலாவது போட்டியில் காயமடைந்த தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னுக்குப் பதிலாக, மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கைல் அபொட் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான மோர்னி மோர்க்கலும், தென்னாபிரிக்கக் குழாமில் காணப்படுகின்ற போதிலும், அண்மைக்காலத்தில் போட்டிகளில் பங்குபற்றியிருக்காத மோர்க்கல், முழுமையான உடற்றகுதியை அடைந்து சில நாட்களே உள்ளதால், அவருக்குப் பதிலாக அபொட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago