Shanmugan Murugavel / 2015 நவம்பர் 18 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் ஐந்தாவது நாளும், மழை காரணமாகக் கைவிடப்பட்டதோடு, இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
போட்டியின் முதல்நாளில் மாத்திரம் விளையாடக்கூடியதாக அமைந்திருந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 214 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பதிலளித்துத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இப்போட்டியில், 81 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசப்பட்டிருந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், குறைந்த பந்துகள் வீசப்பட்ட (ஆனால், கைவிடப்படாத) டெஸ்ட் போட்டிகளின் வரிசையின் 9ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இப்போட்டி, தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸின் 100ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago