2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'எனது காலத்தின் மிகச்சிறந்த பெறுபேறு'

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 14 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணிக்கெதிராக, இந்தியாவில் வைத்துப் பெறப்பட்ட வெற்றி - தோல்வியற்ற முடிவு, தனது பயிற்சிக் காலத்தின் கீழ் இங்கிலாந்து அணி வெளிப்படுத்திய மிகச்சிறப்பான பெறுபேறு என, இங்கிலாந்து அணியின் பயிற்றுநர் ட்ரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஆஷஸுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பெய்லிஸின் கீழ், அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தென்னாபிரிக்காவுக்கு எதிராகவும் சிறப்பான வெற்றிகள் பெறப்பட்டுள்ள போதிலும், இந்த வெற்றி - தோல்வியற்ற முடிவையே, அவர் சிறந்த பெறுபேறு என வர்ணித்துள்ளார்.

பங்களாதேஷில் வைத்து, அவ்வணிக்கெதிராகப் பெறப்பட்ட டெஸ்ட் தோல்விக்குப் பின்னர், இந்தப் பெறுபேறு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .