2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

2024 ஒலிம்பிக் போட்டி நகரங்கள்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புடாபாஸ்ட், ஹம்பேர்க், லொஸ் ஏஞ்செல்ஸ், பரிஸ், ரோம் ஆகிய ஐந்து நகரங்களும், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதுக்கு போட்டியிடும் நகரங்களாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பெருவின் லிமாவில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி போட்டியை நடாத்தும் நகரத்தை தெரிவு செய்யும்.

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் நகரங்கள் இறுதி வாக்கெடுப்பு வரை செல்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு கடந்த ஓகஸ்ட்டில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விதிகளில் மாற்றத்தை கொண்டுவந்திருந்தது. முன்னர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி , விண்ணப்பிக்கும் நகரங்களில் இருந்து தெரிவு செய்து, அதன் பின்னரே 100 உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்புக்கு செல்வதாக இருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .