Shanmugan Murugavel / 2016 ஜூலை 07 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் குசால் ஜனித் பெரேரா மீதான குற்றச்சாட்டு, தவறானதென பின்னர் நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பாக நட்டஈட்டைப் பெறுவதற்கு, சர்வதெச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) ஆதரவு வழங்கியுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
ஊக்கமருந்துக்கு எதிரான உலக முகவராண்மையால் அங்கிகரிக்கப்பட்ட கட்டாரிலுள்ள பரிசோதனை நிலையமொன்றே, ஊக்கமருந்தை குசால் பயன்படுத்தினார் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், சுயாதீன ஆய்வின்படி, அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அன்று என முடிவாகியிருந்தது. இந்நிலையில், மீண்டும் போட்டிகளில் பங்குபற்ற, குசால் பெரேராவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், இவ்வாறு இந்த வழக்கைப் போரிடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபையாலும் குசால் பெரேராவாலும் 13 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவற்றைப் பெறுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை முயன்று வந்தது.
இது தொடர்பில், அண்மையில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட் சபை சபையின் தலைவர் திலங்க சுமதிபால, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில், குசாலுக்கான நட்டஈட்டைப் பெறுவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை ஆதரவளித்ததாக அவர் தெரிவித்தார்.
இதன்போது, 35 மில்லியன் ரூபாய் நட்டஈடு, பொருத்தமானது என திலங்க தெரிவித்தார். குறித்த காலத்தில் குசால் பெரேராவின் வருமான இழப்பு, அவரது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே, இந்தத் தொகையை முன்வைத்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.
இதற்கு லேதிகமாக, குசால் மீது தவறான அறிக்கையை வழங்கிய கட்டாரைச் சேர்ந்த பரிசோதனை நிலையத்தை, சர்வதேச கிரிக்கெட் சபையும் ஊக்கமருந்துக்கு எதிரான உலக முகவராண்மையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago