Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்முறை நடத்தையை கால்பந்தாட்டக் கூட்டமைப்பு உறுதி செய்ததையடுது செல்சி கால்பந்தாட்டக் கழகத்தின் முன்கள வீரரும், ஸ்பெயின் தேசிய அணியின் முன்கள வீரரான டியகோ கோஸ்ட்டாவுக்கு மூன்று போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (19) ஆர்செனல் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் ஆர்செனல் அணியின் வீரர் லோரண்ட் கொஸ்சென்னியின் முகத்தில் கைவைத்தைத் தொடர்ந்து, அவ்வணியின் மற்றொரு வீரரான கப்ரியலுடன் மோதலில் ஈடுபட்டு, கப்ரியல் சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்திலேயே கோஸ்ட்டாவுக்கு மூன்று போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் பின்னர் தனக்கு கிடைக்கப்பெற்ற சிவப்பு அட்டைக்கு எதிராக கப்ரியல் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அம்முறைப்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் அவரது மூன்று போட்டித்தடை தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
கோஸ்ட்டா தனது போட்டித்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், செல்சி கால்பந்தாட்டக் கழகமும், இந்தத் தீர்ப்பை அடுத்து அதிருப்தி அடைவதாக தெரிவித்துள்ளது. தடைகளுக்கெதிராக, பிரித்தானிய நேரப்படி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு முதல் பதிலளிக்க முடியும்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago