Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த புதன்கிழமை (09), இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற செல்சி, ஆர்சனல், பெயார்ண் முனிச் ஆகிய அணிகள் விலகல் முறையில் இடம்பெறவுள்ள போட்டிகளில் பங்குபற்றவுள்ள 16 அணிகளுக்குள் நுழைந்துள்ளன. தவிர, பார்சிலோனா அணியானது, தனது போட்டியைச் சமநிலையில் முடித்துக் கொண்டாலும் அவ்வணியும் இறுதி 16 அணிகளுக்குள் தகுதி பெற்றது.
இங்கிலாந்து பிறிமியர் லீக் போட்டிகளில் தொடர்ந்து தடுமாறி வரும் செல்சி அணியானது, 2-0 என்ற கோல் கணக்கில் போர்ட்டோ அணியைத் தோற்கடித்து, அவ்வணியை சம்பியன்ஸ் லீக்கிலிருந்து வெளியேற்றியது. போட்டியின் 12ஆவது நிமிடத்தில் செல்சி அணியின் டியகோ கோஸ்டா அடித்த பந்ததை, போர்ட்டோ கோல்காப்பாளர் இகர் கசிலாஸ் தடுத்தபோதும், அது இவான் மார்க்னோவின் காலில் பட்டு ஒவ்ண் கோலானது. பின்னர் 52ஆவது நிமிடத்தில் செல்சி அணியின் வில்லியன் மேலுமொரு கோலைப் பெற்றார்.
இதேவேளை, ஆர்சனல் அணியானது ஒலிவர் ஜிரோட்டின் ஹட்ரிக் கோள்களின் உதவியோடு, 3-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பியாகோஸ் அணியை வீழ்த்தி இறுதி 16 அணிகளுக்குள் நுழைந்தது. இதில், ஜிரோட், போட்டியின் 29ஆவது, 49ஆவது, 67ஆவது (பனால்டி) நிமிடங்களில் கோல்களைப் பெற்றிருந்தார்.
தவிர, பெயார்ண் முனிச் அணியானது, 2-0 என்ற கோல் கணக்கில் டைனமோ ஸக்ரப் அணியை வீழ்த்தியிருந்தது. இதில், பெயார்ண் முனிச் அணி சார்பாக ரொபேர்ட் லெவன்டோஸ்கி 61ஆவது, 64ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, பார்சிலோனா, பெயார் லெவ்கின் அணிகளுக்கிடையிலான போட்டியானது, 1-1 என்ற கோல் ரீதியில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. இப்போட்டியில், பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸி 20ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் பெயார் லெவ்கின் அணி சார்பாக ஹெர்னாண்டஸ் 23ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் பெற்றிருந்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago