Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 18 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நோவாக் ஜோக்கோவிக்குக்கும் , தரவரிசையில் பதினாறாம் இடம் வகிக்கும் பிரான்ஸின் ஜோ-வில்பிரைட்டு சொங்காவுக்குமிடையிலான ஷங்காய் ரொலெக்ஸ் மாஸ்ட்டேர்ஸ் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜோகோவிக் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றுள்ளார்.
முதலாவது செட்டை ஜோக்கோவிக் இலகுவாக கைப்பற்றியிருந்தபோதும், இரண்டாவது செட்டில் சொங்கா ஓரளவு போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தபோதும், அதையும் ஜோகோவிக் கைப்பற்ற போட்டி ஒரு மணித்தியாலம் 18 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இது ஜோக்கோவிக்குக்கு மூன்றாவது ஷங்காய் மாஸ்ட்டேர்ஸ் பட்டம் என்பதுடன், இப்பருவகாலத்தில் அவரது ஒன்பதாவது பட்டம் ஆகும். தவிர சீனாவில் மட்டும் அவர் கைப்பற்றும் பத்தாவது பட்டம் ஆகும். இதன் மூலம் ஆண்கள் பிரிவின், அவரது தெளிவான ஆதிக்கம் வெளிப்படுகிறது.
இதில் தனது அரையிறுதிப்போட்டியில் ஜோக்கோவிக், தரவரிசையில் மூன்றாமிடத்தில் இருந்த பிரித்தானியாவின் அன்டி மரேயைத் 6-1,6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கும், அதேவேளை தரவரிசையில் எட்டாம் இடத்திலிருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடாலைத் தோற்கடித்து சொங்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago