2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

டயலொக் விருதுகள் மூன்று மத்தியூஸூக்கு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகளான டயலொக் விருதுகளில், 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர், சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி துடுப்பாட்ட வீரர் ஆகியன விருதுகளை, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் வெற்றிகொண்டார். மக்கள் தெரிவு விருதை, ஓய்வுபெற்ற குமார் சங்கக்கார வெற்றிகொண்டார்.

2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகளுக்காகவே இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

அக்காலத்தில் 20 இனிங்ஸ்களில் 2 சதங்கள், 8 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 77.33 என்ற சராசரியில் 1,160 ஓட்டங்களைக் குவித்த அஞ்சலோ மத்தியூஸ், 20 இனிங்ஸ்களில் 4 சதங்கள், 8 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 71.90 என்ற சராசரியில் 1438 ஓட்டங்களைக் குவித்த குமார் சங்கக்காரவை முந்திக் கொண்டு, சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராகத் தெரிவானார்.

குறித்த காலப்பகுதியில் 5 ஐந்து விக்கெட் பெறுதிகளோடு 27.17 என்ற சராசரியில் 56 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரங்கன ஹேரத் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளராகத் தெரிவானார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 31 இனிங்ஸ்களில் ஒரு சதம், 9 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 62.2 என்ற சராசரியில் 1,244 ஓட்டங்களைக் குவித்த அஞ்சலோ மத்தியூஸ், 28 இனிங்ஸ்களில் 4 சதங்கள், 8 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 46.51 என்ற சராசரியில் 1,256 ஓட்டங்களைக் குவித்த குமார் சங்கக்காரவை முந்திக் கொண்டு, சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி துடுப்பாட்ட வீரராகத் தெரிவானார்.

பந்துவீச்சாளராக, குறித்த காலத்தில் 17 இனிங்ஸ்களில் 21.63 என்ற சராசரியில் 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஜந்த மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த இருபதுக்கு-20 சர்வதேச துடுப்பாட்ட வீரராக குசால் பெரேராவும் பந்துவீச்சாளராக நுவான் குலசேகரவும் தெரிவாகினர்.

வளர்ந்துவரும் சிறந்த வீரருக்கான விருதையும் குசால் பெரேரா வெற்றிகொண்டார்.

பெண்களில் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான விருதை சாமரி அத்தப்பத்துவும் சிறந்த பந்துவீச்சாளராக இனோகா ரணவீரவும் சிறந்த சகலதுறை வீராங்கனையாக இஷானி லொக்குசூரிய கௌஷல்யாவும் தெரிவாகினர்.

உள்ளூர்ப் போட்டிகளின் முக்கிய விருதுகள்:
துடுப்பாட்டம்: மிலிந்த சிரிவர்தன
பந்துவீச்சு: மலிந்த புஷ்பகுமார
சகலதுறை: உமேஷ் கருணாரத்ன
இரண்டாமிடம்: என்.சி.சி அணி
வெற்றியாளர்கள்: இலங்கை துறைமுக அதிகாரசபைகள் வி.க.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டி:
துடுப்பாட்டம்: லஹிரு மிலந்த
பந்துவீச்சு: மலிந்த புஷ்பகுமார
சகலதுறை: மிலிந்த சிரிவர்தன
இரண்டாமிடம்: எஸ்.எஸ்.சி அணி
வெற்றியாளர்கள்: கோல்ட்ஸ் கி.க.

இருபதுக்கு-20 தொடர்:
துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக
பந்துவீச்சு: ரஜித்த
சகலதுறை: மிலிந்த சிரிவர்தன
இரண்டாமிடம்: எஸ்.எஸ்.சி அணி
வெற்றியாளர்கள்: பதுரெலிய வி.க.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .