2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தமிம் இக்பாலுக்கு அபராதம்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 06 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பாலுக்கு, அபராதத்தை விதிப்பதற்கு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரில் இடம்பெற்ற சம்பவங்களுக்காகவே இவ்வராதம் விதிக்கப்படவுள்ளது.

சிட்டகொங் விக்கிங்ஸ் அணியின் தலைவரான தமிம் இக்பால், சியல்கொட் சுப்பர் ஸ்டார்ஸ் அணியின் உரிமையாளரான அஸிஸூல் இஸ்லாத்துடன், முரண்பட்டிருந்தார். அஸிஸூல், தன்னை அவதூறுக்கு உட்படுத்தியதாக, தமிம் இக்பால் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தொடர் முடிவடைந்த பின்னர், ஒழுக்காற்று விசாணைகள் இடம்பெற்றதொடு, அதில், அஸிஸூல் மீது அதிகளவிலான குற்றங்கள் இருப்பதாக முடிவு காணப்பட்டது. அதனால், அவருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுமெனவும், அஸிஸூலினால் தூண்டப்பட்டபோது, கட்டுப்பாட்டை வெளிப்படுத்தத் தவறிய தமிம் இக்பாலுக்கும் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இவர்களுக்கான அபராதங்களின் சரியான அளவு, விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .