Shanmugan Murugavel / 2016 ஜனவரி 10 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டு மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில், நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கவுள்ள இலங்கை அணிக்கு, உலகின் முதல்நிலை இருபதுக்கு-20 அணியாகக் களமிறங்கும் வாய்ப்பு, அருகியுள்ளது. நியூசிலாந்துக்கெதிரான தொடரைத் தோற்று, முதலிடத்தை இழந்துள்ள நிலையிலேயே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் தோற்ற நிலையில், முதலிடத்தைத் தக்க வைப்பதற்கு, இரண்டாவது போட்டியை வெற்றிகொண்டேயாகவேண்டும் என்ற கட்டாயத்தில், இலங்கை களமிறங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, 6.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களுடன் தடுமாறியது. அதிர்ஷ்டத்தில் மத்தியில் துடுப்பெடுத்தாடிவந்த டில்ஷானும் ஆட்டமிழக்க, 6 விக்கெட்டுகளை இழந்து 70 ஓட்டங்கள், 8 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்கள் என்ற மோசமான நிலையில் இலங்கை காணப்பட்டது. அஞ்சலோ மத்தியூஸ் மாத்திரம், இறுதிவரை போராடி, இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெறுவதை உறுதிசெய்தார்.
சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மத்தியூஸ், 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களைப் பெற்றார். இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்ற உயர்வான ஓட்டங்கள் இவையாகும். டில்ஷான், 26 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்த வீரரும், 10 ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.
பந்துவீச்சில் கிரான்ற் எலியட் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் சான்ட்னெர், அடம் மில்ன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
143 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது. அதிரடியாக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியான மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்ஸன், 6.4 ஓவர்களில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
துடுப்பாட்டத்தில் மார்ட்டின் கப்டில் 25 பந்துகளில் 63 ஓட்டங்களையும் கொலின் முன்றோ 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸன் 21 பந்துகளில் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக, கொலின் முன்றோ தெரிவானார்.
புதிய தரப்படுத்தலின்படி, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள், 118 புள்ளிகளுடன் காணப்படுகின்றன. ஆனால், தசமப் புள்ளிகளின் அடிப்படையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலிடத்தில் காணப்படுகிறது. இலங்கை அணி 2ஆம் இடத்திலும் அவுஸ்திரேலிய அணி மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றன. தொடர்ந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, ஹொங் கொங், நெதர்லாந்து, சிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் காணப்படுகின்றன.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago