Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவரான மைக்கல் கிளார்க் தான் இவ்வருட பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடப்போவதில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் மெல்பேர்ண் ஸ்டார்ஸ் அணியுடன் கையொப்பமிட்ட மைக்கல் கிளார்க், இந்த பருவகால பிக் பாஷ் லீக்கில் அணிக்கு தலைமை தாங்கவேண்டி இருந்தார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து கொஞ்ச காலத்துக்கு போட்டிகளிலிருந்து விலகியிருக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஒரு கட்டத்தின்போது களத்திற்கு திரும்பும் நம்பிக்கையை வெளியிட்ட கிளார்க், தொடர்ந்தும் கிரிக்கெட்டுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புபட்டிருப்பேன் என மேலும் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சொந்த கிரிக்கெட் அகடமிடயை தொடங்கிய கிளார்க் 2016-17 பருவகலாத்தில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago