Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சொய்ப் அக்தர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில், அணியொன்றை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜம் சேதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்திய அவர், தனது விருப்பத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
'பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர்பாக அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள், நானும் அப்படியே. தேசத்துக்கான பரிசு போன்றது இது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் குறியீடல்ல, இது பாகிஸ்தானினது குறியீடு" எனத் தெரிவித்த அவர், 'இந்தத் தொடரில் அணியொன்றை வாங்க ஆர்வமாக உள்ளேன். அதன் மூலமாக, 100 மைல் வேகத்தில் பந்துவீசக்கூடிய மேலும் பல சொய்ப் அக்தர்களை உருவாக்கி, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீது அதிகமான விமர்சனங்களைக் வெளிப்படுத்திவரும் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குச் சேவை செய்வதற்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் பதவியொன்றைப் பெற வேண்டிய தேவையில்லை எனக் குறிப்பிட்டார். அத்தோடு, அதிகமான விமர்சனங்களை வெளிப்படுத்திய போதிலும், தனது எண்ணங்கள் நேர்முகமானவையாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago