Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு வருடங்கள் இடைவேளையின் பின், பங்களாதேஷ் பிறிமியர் லீக்கின் மூன்றாவது பருவகாலம், எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தொடரானது ஆறு அணிகளைக் கொண்டதாக அமையவுள்ளதுடன், மூன்று புதிய அணி உரிமையாளர்களும் பங்கெடுக்கவுள்ளனர்.
டாக்கா அணியானது பெக்சிம்கோ குழுமத்தாலும், சிட்டகொங் அணியானது டிபிஎல் குழுமத்தாலும், பரிசல் அணியானது அக்ஸிம் டெக்னோலஜிஸாலும் நிர்வகிக்கப்படுகின்ற நிலையில், ராஜஸ்தானி, குளுநா ஆகிய அணிகளே இந்த வருடம் உரிமையாளர்கள் இல்லாமல் உள்ளன.
மூன்று பழைய அணி உரிமையாளர்களை மட்டுமே அனுமதித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, 2013 ஆம் இடம்பெற்ற போட்டிகளுக்கான மிகுதி பணத்தை செலுத்துபவர்களுக்கும், மூன்றாவது பருவகாலத்துக்கு, 5.5 கோடி டாகா, வங்கி உறுதியை வழங்குபவர்களுக்கு மட்டுமே புதிதாக அணிகளை வாங்குவதுக்குரிய ஏலத்தை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையில் அலிஃப் குழுமம், ரோயல் ஸ்போர்ட்ஸ், ஐ ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களே ஏலத்தில் பங்கேற்கமுடியும். பரிசல் அணியின் முன்னாள் உரிமையாளர்களான அலிஃப் குழுமம் இம்முறை சியால்கொட் அணியின் உரிமையாளராகவுள்ளதோடு, ஐ ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரங்பூர் நிறுவனத்தின் உரிமையாளராகவுள்ளது.
இந்த முறை புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள கொமிலா அணியின் உரிமையாளராக ரோயல் ஸ்போர்ட்ஸ் செயற்றபடவுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago