Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் பிறிமியர் லீக்குக்கான வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, தற்போது தடை நீங்கப்பெற்ற பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் மொகமட் அமிர் இடம்பெற்றுள்ளார். இவர் தவிர மிஸ்பா-உல்-ஹக், யுனிஸ்கான், மொகமட் ஹபீஸ் உள்ளிட்ட 52 பாகிஸ்தான் வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இது தவிர சமித் பட்டேல், போல் கொலிங்வூட், ரவி பொபாரா உள்ளிட்ட 48 இங்கிலாந்து வீரர்களும், 25 இலங்கை வீரர்களும், 33 மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களும், 5 சிம்பாப்வே வீரர்களும், 4 அவுஸ்திரேலிய வீரர்களும், 4 தென்னாபிரிக்க அணி வீரர்களும், 2 நியூசிலாந்து வீரர்களும், 13 துணை அங்கத்துவ நாடுகளின் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பிபிஎல் பருவகாலத்தில், அணிகள் இரு முறைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை தெரிவு செய்து கொள்ள முடியும். இதில் முதலாவது முறையின்படி ஒக்டோபர் 31ஆம் திகதி, பங்களாதேஷ் பிறிமியர் லீக்கால் வழக்கப்படும் பட்டியலில் இருந்து வீரர்களை அணிகள் தெரிவு செய்ய முடியும். இந்த முறையில் தெரிவு செய்யப்படும் வீரர்களுக்கு ஊதியம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையால் வழங்கப்படவுள்ளது.
இரண்டாவது முறையின் மூலம் அணிகள், வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இம்முறையை பின்பற்றும் வீரர்களுக்கான ஊதியத்துக்கான உறுதியை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்கமாட்டாது. தனது ஊதியத்தை அந்தந்த வீரரே அணிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு அணியும் தமது மொத்த குழாமில் ஏழு வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்ய முடியும் என்பதுடன், போட்டியொன்றில் நான்கு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வீரர்களின் உயர்ந்த பட்ச ஊதியத் தொகை 70,000 அமெரிக்க டொலர்களாக காணப்படுவதோடு, குறைந்த தொகையாக 30,000 அமெரிக்க டொலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago