Shanmugan Murugavel / 2015 நவம்பர் 19 , மு.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் செப் பிளட்டர், உப தலைவர் மைக்கல் பிளட்டினி ஆகியோர் தமது 90 நாட்கள் தடைகளுக்கெதிராக மேற்கொண்டிருந்த முறையீடுகள் பீபாவின் முறையீட்டு சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பிளட்டருக்கும் பிளட்டினிக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையிலேயே கடந்த ஒக்டோபர் மாதம் இவர்கள் இருவருக்கும் 90 நாட்கள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பீபாவுக்கு அனுகூலமாற்ற ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டமை தொடர்பிலும், பிளட்டினிக்கு இரண்டு மில்லியன் யூரோக்களை கட்டணமாக பிளட்டினிக்கு வழங்கியமை தொடர்பிலுமே 79 வயதான பிளட்டர் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
எனினும், இருவரும் தாம் தவறேதும் செய்திருக்கவில்லை என மறுத்துள்ளதோடு விளையாட்டுக்கான தீர்ப்பாய நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளனர்.
இதேவேளை, பீபாவின் செயலாளர் நாயகம் ஜெரோம் வல்கியும் கடந்த ஒக்டோபர் மாதம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் பற்றி எந்தவித கருத்துக்களும் பீபாவினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago